சனி, 4 மே, 2024

இலங்கை 10 ஆயிரம் மாணவர்களுக்கு விண்ணப்பிக்காத பாடம் வந்ததால் குழப்பம்!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு இரண்டாம் முறை விண்ணப்பித்த 10,000க்கும் அதிகமானோர், அதாவது தனியார் விண்ணப்பதாரர்கள், தாங்கள் விண்ணப்பிக்காத பாடத்திற்கான அனுமதி அட்டையை பெற்றதால், சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். 

தொழிநுட்ப பிரச்சினை காரணமாக ஏற்பட்ட பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். 2023 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை மே மாதம் 06 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. 

இந்த ஆண்டு பரீட்சைக்கு 452,979 பேர் விண்ணப்பித்துள்ளனர், அதில் 65,331 பேர் தனியார் விண்ணப்பதாரர்கள். அததெரண BIG FOCUS நிகழ்ச்சியில், இது தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்திடம் வினவியபோது, ​​எழுந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பில் உரிய பாடசாலைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சார்த்திகள் பரீட்சைக்கு தோற்றாமல் இருப்பதற்கான அறிகுறிகள் தென்படவில்லை எனவும் தெரிவித்தார். 

இதேவேளை, பரீட்சை நடைபெறும் பரீட்சை நிலையங்களில் கிட்டத்தட்ட 35% பாடசாலைகளில் டெங்கு நுளம்பு பெருகக்கூடிய இடங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 

 நாளை (04) மற்றும் நாளை மறுதினம் (05) ஆகிய இரு விடுமுறை நாட்களிலும் நுளம்புகள் இருப்பதாக அடையாளம் காணப்பட்ட பாடசாலைகளை சுத்தம் செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பாடசாலை அதிகாரிகளுக்கும் பெற்றோருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.

இந்தியாவில் கடும் வெயிலுக்கு 9 பேர் பலி!

இத்தினங்களில் பல ஆசிய நாடுகளில் கடுமையான வெப்பமான வானிலை பதிவாகி வருகிறது. இந்த வெப்பமான வானிலையால் இந்தியாவில் பல மாநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 

இந்தியாவில் அதிக வெப்பம் காரணமாக இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கிழக்கிந்திய மாநிலமான மேற்கு வங்கம் வெப்பமான வானிலையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், மாநில மக்கள் கடும் குடிநீர் தட்டுப்பாட்டைச் சந்திக்க வேண்டியுள்ளது. 

குறித்த பிரதேசத்தில் பெரும்பான்மையான மக்கள் கிணற்று நீரை பயன்படுத்துவதாகவும் கிணறுகள் வற்றிவிட்டதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கிழக்கிந்தியாவில் ஏப்ரல் மாதத்தில் அதிகப்படியான வெப்பநிலை பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதன் விளைவாக, கிழக்கிந்தியாவில் 1901 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஏப்ரல் மாதம் மிகவும் வெப்பமான வானிலை கடந்த ஏப்ரல் மாதம் பதிவு செய்யப்பட்டது. இந்த வகை வெப்பமான வானிலை ஜூன் மாதம் வரை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கைகளை துருக்கி அரசு நிறுத்தி வைத்துள்ளது.

ஹமாஸ் அமைப்பினரின் தாக்குதலுக்கு பதிலடியாக, காசா மீது போர் தொடுத்துள்ள இஸ்ரேல், காசாவின் பெரும்பாலான பகுதிகளை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. தனது கடைசி இலக்கான ரபா நகரிலும் அவ்வப்போது தாக்குதல் நடத்துகிறது. ஹமாஸ் அமைப்பை முற்றிலும் அழிக்கும் வரை தாக்குதல் தொடரும் என இஸ்ரேல் கூறியிருக்கிறது. 

இந்த தாக்குதலில் ஹமாஸ் அமைப்பினர், அப்பாவி பாலஸ்தீனர்கள் என 34 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். ரபா நகரில் தாக்குதலை தீவிரப்படுத்தினால் மிகப்பெரிய பேரழிவு ஏற்படும் என்பதால் போரை நிறுத்த வேண்டும் என உலக நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், காசாவில் நாளுக்கு நாள் நிலைமை மோசமடைந்து வருவதாலும், இஸ்ரேலால் ஏற்படும் பாதிப்புகள் நீடிப்பதாலும் இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கைகளை துருக்கி அரசு நிறுத்தி வைத்துள்ளது. இஸ்ரேலுக்கான ஏற்றுமதியில் கடந்த மாதம் துருக்கி பல கட்டுப்பாடுகளை விதித்திருந்த நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கையாக அனைத்து வர்த்தக நடவடிக்கைகளையும் நிறுத்தி உள்ளது. 

இது தொடர்பாக துருக்கி வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஏப்ரல் மாதம் இஸ்ரேலுக்கான 54 தயாரிப்பு நிறுவனங்களின் ஏற்றுமதியை அரசு தடை செய்தது. ஏனெனில் படுகொலை, மனிதாபிமான பேரழிவு, இஸ்ரேலால் ஏற்படும் அழிவுகள் தொடர்ந்தன. 

மேலும் இஸ்ரேலிய அரசாங்கம் சர்வதேச போர்நிறுத்த முயற்சிகளை புறக்கணித்ததுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு மனிதாபிமான உதவியையும் தடுத்தது. இப்போது இரண்டாம் கட்ட நடவடிக்கையாக, இஸ்ரேலுடனான ஏற்றுமதி மற்றும் இறக்குமதிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. 

இஸ்ரேலிய அரசாங்கம் காசாவிற்கு மனிதாபிமான உதவிகளை தடையின்றி போதுமான அளவில் வழங்க அனுமதிக்கும் வரை இந்த புதிய நடவடிக்கைகளை அரசு செயல்படுத்தும். இவ்வாறு துருக்கி வர்த்தக அமைச்ககம் கூறி உள்ளது.

சேலம்: பட்டியலின மக்கள் கோவில் நுழைவுக்கான பேச்சுவார்த்தையில் கலவரம் வெடித்தது ஏன்?

சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி கிராமத்தில், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவிலில், வழிபாடு நடத்துவது தொடர்பாக பட்டியலின மக்களுக்கும் பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கும் இடையே நடந்த கலவரத்தில் கடைகளுக்குத் தீ வைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அமைதியின்மையை ஏற்படுத்தியது. கலவரத்திற்கான உண்மை காரணம் என்ன? பிபிசி தமிழ் அங்கு கள ஆய்வு மேற்கொண்டபோது சேலம் மாவட்டம் காடையம்பட்டி தாலுகா அருகே தீவட்டிப்பட்டி கிராமம் அமைந்துள்ளது. 

இங்கு பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்களின் 500 குடும்பங்கள் உள்ளன. இந்த கிராமத்திற்கு மிக அருகிலுள்ள நாச்சினம்பட்டியில் 200 பட்டியலின குடும்பங்கள் உள்ளன. இரு கிராமத்தின் மத்தியில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. கோவிலில் இந்தாண்டுக்கான திருவிழா சில நாட்களுக்கு முன்பு துவங்கியுள்ளது.இந்நிலையில், மே 1ஆம் தேதி இரவு, "ஆதிக்க சாதியினர் தங்களை கோவிலுக்குள்விட மறுக்கிறார்கள்" எனக் குற்றம்சாட்டிய பட்டியலின மக்கள் அவர்களிடம் வாக்குவாதம் செய்துள்ளனர்.

இதனால் பிரச்னைக்குத் தீர்வு காண, மே 2ஆம் தேதி இருதரப்பையும் அழைத்த வருவாய்த்துறையினர் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இருதரப்பும் சமரசம் அடையாத நிலையில், அன்று மதியமே இருதரப்பிற்கும் கைகலப்பு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் கற்களால் தாக்கிக்கொண்டனர். அப்போது, அப்பகுதியில் இருந்த நகைக்கடை, காய்கறிக்கடை என 5 கடைகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததால், இது கலவரமாக மாறி தமிழக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

உண்மையில் அங்கு என்ன நடந்தது? கலவரத்திற்கான காரணம் என்ன என்பதை அறிய பிபிசி தமிழ் தீவட்டிப்பட்டி கிராமத்தில் கள ஆய்வு மேற்கொண்டது. இதேபோன்ற பிரச்னை ஏற்பட்ட திருவண்ணாமலை அருகே உள்ள அம்மன் கோவில் ஒன்றில், கோவிலுக்குள் வந்து பட்டியலின மக்கள் வழிபாடு செய்யத் தொடங்கியதால் மற்ற சமூக மக்கள் ஒன்று சேர்ந்து தங்களுக்கென புதிய கோவில் கட்ட தொடங்கியுள்ளனர்.

நாங்கள் தீவட்டிப்பட்டி மற்றும் நாச்சினம்பட்டிக்குச் சென்றபோது, இரு கிராமங்களிலும் திரும்பிய திசையெல்லாம் போலீசாரும், திருவிழாவிற்காக வைக்கப்பட்டிருந்த பேனர்களும் காட்சியளித்தன. நாச்சினம்பட்டி நுழைவுப்பகுதியில் பரபரப்பான அந்த சாலையில், கலவரத்திற்கு சாட்சியாகத் தீக்கிரையான கடைகளும் அந்தக் கடைகளில் இருந்த பொருட்களும் இருந்தன. தீக்கிரையான நகைக்கடைக்கு அருகே பூக்கடை நடத்தி வரும் சரஸ்வதியிடம் பேசியபோது, "இந்தக் கட்டடத்தில் ஆதிக்க சாதி, பட்டியல் சாதி எனப் பல்வேறு தரப்பைச் சேர்ந்தவர்கள் கடை வைத்துள்ளனர். 

தீ பிடித்ததில் இருதரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் நடந்தபோது, அன்று மதியம் 1:00 மணிக்கு மேல் திடீரென இப்பகுதியில் பல இளைஞர்கள் கற்களை வீசித் தாக்கிக் கொண்டு இருந்தனர்," என அன்று நடந்தது குறித்து விவரித்தார். அப்போது ஒரு காய்கறிக்கடையில் தீப்பிடித்ததாகவும் அந்தத் தீ மளமளவென அருகிலுள்ள கடைகளுக்குப் பரவியதாகவும் பிபிசி தமிழிடம் பேசிய சரஸ்வதி கூறினார். 

இருப்பினும் காய்கறிக்கடை அருகே ஒரு டிப்பர் லாரி நின்றிருந்ததால் யார் தீ வைத்தது எனத் தெரியவில்லை என்கிறார் அவர். சரஸ்வதியிடம் பேசிவிட்டு பட்டியலின மக்கள் வசிக்கும் நாச்சினம்பட்டி கிராமத்தினுள் சென்றபோது அங்குள்ள வேப்பமரத்தின் அடியில், சில பெண்கள், இளைஞர்கள் தலையில் காயத்திற்கான கட்டுகளுடன், மற்றவர்களோடு அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அவர்களிடம் கோவில் தொடர்பாக ஏற்பட்ட கலவரம் குறித்தும் அன்று என்ன நடந்தது எனவும் வினவினோம்.

இத்தனை ஆண்டுகளாகத் தங்களுக்கு எந்தப் பிரச்னையும் வந்ததில்லை என்றும் "ஆதிக்க சாதி இளைஞர்கள் தற்போது எங்களை கோவிலுக்குள் வரவிடாமல் தடுத்ததால்தான் பிரச்னை" எழுந்ததாகத் தெரிவிக்கிறார் தங்காய். ‘‘எனக்கு 63 வயதாகிறது. பல ஆண்டுகளாக நாங்கள் மாரியம்மன் கோவிலுக்கு உள்ளே சென்று வழிபாடு நடத்தி வருகிறோம். 

எங்கள் பகுதியில் உற்சவரான மாரியம்மனை வைத்து பூஜை செய்து கோவிலுக்கு அழைத்துச் சென்றுதான் திருவிழா நடத்துவார்கள். அங்குள்ள சாதியினரும் நாங்களும் ஒன்றாகத்தான் இருந்து வந்தோம். 

 ஆனால், இந்த ஆண்டு பட்டியல் சாதியினர் கோவிலுக்குள் வரக்கூடாது என்று பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த சிறுவர்களும் இளைஞர்களும் கூறியதோடு சாதிப் பெயரை வைத்து மிக மோசமாகத் திட்டியதாகவும்" கண்ணீருடன் தழுதழுத்த குரலில் நம்மிடம் பேசினார் அவர். 

 தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு பேசத் துவங்கிய தங்காய், ‘‘பட்டியலின சாதியில் பிறந்தால் என்ன? நாங்களும் மனிதர்கள்தானே, எங்களுக்கும் கோவிலுக்குள் சென்று வழிபட உரிமை உள்ளது. நாங்கள் எங்கள் உரிமையைத்தான் கேட்கிறோம், எங்களை கோவிலுக்குள் வழிபட அனுமதிக்க வேண்டும், மீண்டும் நாங்கள் பிரச்னையின்றி வாழ வேண்டும்,’’ என்றார்.

வெள்ளி, 3 மே, 2024

பிரிஸ்டலில் நகர மருத்துவமனையில் நோயாளிகள் விலகி இருக்குமாறு வலியுறுத்தப்பட்ட முக்கிய சம்பவம்

ஒரு முக்கியமான சம்பவம் அறிவிக்கப்பட்ட பின்னர், ஒரு பெரிய நகர மருத்துவமனையை 'இருட்டில்' வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்ட வியத்தகு தருணத்தைப் பற்றி நோயாளிகள் பேசினர். 

பிரிஸ்டல் ராயல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மக்கள், தாங்கள் இருளில் மூழ்கியதால் 'வெடிப்பு' என்று சிலர் நினைத்ததைக் கேட்டதாகவும், உடனடியாக அந்த இடத்தை விட்டு வெளியேறுமாறும் கூறியுள்ளனர். மருத்துவமனை முதலாளிகள் 'மின்வெட்டு' என்று விவரித்த பிறகு, பிரிஸ்டல் நகர மையத்தில் பல அவசர சேவைகள் சம்பவ இடத்தில் உள்ளன. 

ஆனால் வெளியேற வேண்டிய கட்டாயத்தில் இருந்தவர்கள் என்ன நடக்கிறது என்பதில் குறிப்பிடத்தக்க குழப்பம் இருப்பதாகக் கூறினர் - சிலர் இது கூரை இடிந்து விழுந்ததாகக் கூறினர், மற்றவர்கள் தீப்பொறிகள் பறந்து தீயை உண்டாக்குவதாகக் கூறினர். 

பிரிஸ்டலில் உள்ள இல்லத்தரசி லிசா டேவிட்சன், 50, கிரோன் நோய்க்காக இரத்தத்தை உட்செலுத்தினார். அவள் சொன்னாள்: "எல்லா விளக்குகளும் அணைந்துவிட்டன, அவை ஒளிரும் மற்றும் அணைந்துகொண்டே இருந்தன. பின்னர் அவர்கள் எங்களை வெளியே செல்லச் சொன்னார்கள், எங்களால் வெளியேறும் வழியைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

 

கொழும்பு 07, விகாரமஹாதேவி பூங்காவிற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மருத்துவ மாணவர்கள்.

கொழும்பு 07, விகாரமஹாதேவி பூங்காவிற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மருத்துவ மாணவர்களை கலைப்பதற்காக பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம். கொழும்பு 07 ஸ்ரீமத் அநாகரிக தர்மபால மாவத்தையின் ஒரு பாதை, மருத்துவ மாணவர்களின் எதிர்ப்பு ஊர்வலம் காரணமாக வாகன போக்குவரத்துக்காக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

நாட்டில் தனியார் மருத்துவக் கல்லூரிகளை நிறுவுவதற்கும், தேசிய வணிக முகாமைத்துவ பாடசாலையில் (NSBM) மருத்துவ பீடத்தை நிறுவுவதற்கும் எதிராக மருத்துவ பீட மாணவர்களின் நடவடிக்கைக் குழுவினால் இந்த எதிர்ப்பு ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பிரிட்டனுக்கு சட்டவிரோதமாக வரும் புகலிடக் கோரிக்கையாளர்களை ருவாண்டாவுக்கு நாடு கடத்த அனுமதிக்கும் ருவாண்டாவின் பாதுகாப்பு மசோதா எனப்படும் சர்ச்சைக்குரிய சட்டத்திற்கு கடந்த மாதம் பாராளுமன்றம் ஒப்புதல் அளித்தது.ருவாண்டாவிற்கு நாடு கடத்த விரும்பும் பாதிக்கும் மேற்பட்டவர்களுடன் தொடர்பை இழந்துவிட்டது, ஆனால் அவர்களைக் கண்டுபிடிப்பதாக உறுதியளித்துள்ளது. 

சர்ச்சைக்குரிய திட்டத்தை நிறுத்த முடியுமா? ஒரு அறிக்கையில், அடுத்த ஒன்பது முதல் 11 வாரங்களில் தொடங்கும் முதல் நாடுகடத்தலுக்கு முன்னதாக "தேசம் தழுவிய நடவடிக்கைகளின் தொடர்" அறிவித்தது. உள்துறை மந்திரி ஜேம்ஸ் புத்திசாலித்தனமாக, அமலாக்க குழுக்கள் "இங்கே இருக்க உரிமை இல்லாதவர்களை விரைவாக தடுத்து வைக்கும் வேகத்தில் வேலை செய்கின்றன, எனவே நாங்கள் தரையில் இருந்து விமானங்களை பெற முடியும்" என்றார். 

இந்த ஆண்டின் பிற்பகுதியில் தேர்தலுக்கு அழைப்பு விடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் சுனக், சிறிய படகுகளில் ஆங்கிலக் கால்வாயைக் கடப்பதைத் தடுக்கவும், மக்களைக் கடத்தும் கும்பல்களின் பிரச்சினையைச் சமாளிக்கவும் முதன்மையான குடியேற்றக் கொள்கை முயல்கிறது என்றார்.

 தொழிற்சங்கங்களும் மனித உரிமைகள் தொண்டு நிறுவனங்களும் இதுவரை கைது செய்யப்பட்ட அலைகள் குறித்து வருத்தம் தெரிவித்துள்ளன. அகற்றும் மையங்களுக்கு இடமாற்றம் செய்வதைத் தடுப்பதில் சிலர் வெற்றி பெற்றாலும், சட்ட நடவடிக்கை எடுப்பது கடினமாகி வருவதாக அவர்கள் கூறுகின்றனர். 

வெகுஜன கைது பிரச்சாரத்தால் குறிவைக்கப்படுவது யார்? ஜனவரி 2022 மற்றும் ஜூன் 2023 க்கு இடையில் முன் அனுமதியின்றி பிரிட்டனுக்கு வந்த சுமார் 5,700 ஆண்கள் மற்றும் பெண்கள் அடங்கிய ஆரம்பக் குழுவில் கைதுகளை மேற்கொள்வதாக உள்துறை அலுவலகம் அறிவித்துள்ளது. 

இந்தக் குழுவில் உள்ளவர்களுக்கு "நோட்டீஸ்" அனுப்பப்பட்டுள்ளது. அவர்களை ருவாண்டாவிற்கு நாடு கடத்துவது குறித்து பரிசீலிக்கப்படுகிறது என்று கூறினார்.

இலங்கை 10 ஆயிரம் மாணவர்களுக்கு விண்ணப்பிக்காத பாடம் வந்ததால் குழப்பம்!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு இரண்டாம் முறை விண்ணப்பித்த 10,000க்கும் அதிகமானோர், அதாவது தனியார் விண்ணப்பதாரர்கள், தாங்கள் வி...